பச்சிளம் குழந்தைகளை மிரட்டும் நிமோனியா காய்ச்சல் - தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு

நிமோனியா தடுப்பூசியின் கையிருப்பை உறுதி செய்யுமாறு, மத்திய மாநில அரசுகளுக்கு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-09-25 17:21 GMT

சென்னை,

பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும், இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள் எனவும், இறக்கும் 4 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவை சேர்ந்தது எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நிமோனியாவுக்கான பி.சி.வி. தடுப்பூசி திட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், தமிழகத்திலும் நிமோனியாவுக்கான பி.சி.வி. தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. பி.சி.வி. திட்டத்தில் குழந்தை பிறந்த மூன்று, ஆறு மற்றும் ஒன்பதாவது மாதங்கள் என 3 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், கடந்த ஒரு மாத காலமாக நிமோனியா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில், குழந்தைகளுக்கு மீண்டும் நிம்மோனியா காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஹெச்.ஒன். என்.ஒன், டெங்கு, மலேரியா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், நிம்மோனியா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கி, உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு செலுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்