பா.ம.க. பிரமுகர் நூதன போராட்டம்
10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக்கோரி கள்ளக்குறிச்சியில் பா.ம.க. பிரமுகர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
சங்கராபுரம் தாலுகா பலகச்சேரி கிராமத்தை சேர்ந்த ஒன்றிய பா.ம.க. அமைப்பு செயலாளர் மணி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வருகிற 31-ந் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். இது பற்றிய தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கோரிக்கையை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுக்குமாறு கூறி அவரை சமாதானம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட மணி, கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் தனது கோரிக்கை குறித்த மனு அளித்தார். அதில் வன்னியர் சமூகத்தினர் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளனர். இதை தவிர்க்க வருகிற 31-ந் தேதிக்குள் இட ஒதுக்கீ்ட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.