பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும் பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பா.ம.க. ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் நேற்று பா.ம.க. ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்கராஜ் வரவேற்றார். மாநில வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை தலைவர் சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்தில் வாணியாறு அணையில் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும். வாணியாறு அணியில் இருந்து ஏற்காடு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும். அணையின் இடதுபுற கால்வாயை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டியில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். சேலம் முதல் வேலூர் செல்லும் பஸ்கள் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற தலைவர் செங்கோடன், நகர பசுமை தாயகம் செயலாளர் அருள், நிர்வாகி ஆறுமுகம், நகர பொருளாளர் கலா, மகளிரணி, பொறுப்பாளர்கள் ராஜலட்சுமி, அமுல், ஒன்றிய தலைவர் தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் சரவணன், சுகேந்திரன், சத்யராஜ், விக்னேஷ் உள்பட பலர் கலந்து ெகாண்டனர். முடிவில் மாவட்ட ஊடக பேரவை அமைப்பு செயலாளர் அரவிந்தன் நன்றி கூறினார்.