பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்

சங்கரன்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-09-07 14:03 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் பால் நேரு, சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் கருத்த பாண்டியன், குருவிகுளம் ஒன்றிய செயலாளர் சுவாமிதாஸ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், சங்கரன்கோவில் ஒன்றிய அமைப்புச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கருப்பசாமி வரவேற்றார். தென்காசி மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன், மாநில துணைத்தலைவர் சேது ஹரிஹரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில், சங்கரன்கோவில் நகரத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பஸ்நிலையத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளும் சங்கரன்கோவில் நகரத்துக்குள்ளும் வந்து செல்ல வேண்டும், சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதிகளில் விவசாய பாசனத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தின் தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வசந்தகுமார், விவசாய சங்க தலைவர் மதிராஜ், மகளிர் அணி செயலாளர் பாக்கியம், இளைஞர் அணி பொறுப்பாளர் தேவ் வெங்கடேஷ், மாணவரணி செயலாளர் மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்