'நாட்டின் வளர்ச்சிக்காகவும், உலக நன்மைக்காகவும் பிரதமர் தியானத்தில் ஈடுபட்டார்' - எல்.முருகன்
நாட்டின் வளர்ச்சிக்காகவும், உலகத்தின் நன்மைக்காகவும்தான் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டார் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
கன்னியாகுமரில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "பொதுவாக படப்பிடிப்புகளுக்கு பார்வையாளர்கள் வருவதை பார்த்திருக்கிறேன். ஆனால் கன்னியாகுமரியில் நடக்கும் படப்பிடிப்புக்கு பிரதமர் அவராகவே பார்வையாளர்களை அழைத்துச் சென்றுள்ளார்" என்று விமர்சித்தார்.
இந்நிலையில் பிரகாஷ்ராஜின் விமர்சனத்திற்கு பதிலளித்த மத்திய மந்திரி எல்.முருகன், "பிரகாஷ் ராஜிடம் வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்? இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகத்தின் நன்மைக்காவும்தான் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். அவர் தியானத்தில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. அவர் சிறுவயது முதலே ஆன்மீகத்தில் மிகவும் பற்று கொண்டவராக இருந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.