பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்த பிளஸ்-2 மாணவர்கள்

பள்ளி வகுப்பறையை பிளஸ்-2 மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

Update: 2023-04-04 19:17 GMT

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் தேர்வு முடிந்த பின்னர், தங்களது வகுப்பறையில் அமரும் இருக்கைகள் உள்ளிட்டவற்றை உடைத்து சேட்டையில் ஈடுபட்டு செல்லும் நிகழ்வுகள் நடக்கின்றன. அவ்வாறு இல்லாமல் பெரம்பலூர் அருகே எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 கணித பிரிவு வகுப்பு மாணவர்கள் 28 பேர் நேற்று முன்தினம் தங்களுக்கு தேர்வு முடிந்தாலும், நேற்று தாங்கள் பயின்ற பள்ளிக்கு வருகை தந்து தங்களது வகுப்பறையை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் அவர்கள் கரும்பலகைக்கு வண்ணம் பூசி, வகுப்பறை சுவருக்கு வர்ணம் தீட்டினர். மேலும் அவர்கள் தாங்கள் பயின்றதன் நினைவாக வகுப்பறையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உருவப்படத்தை மாட்டி விட்டு சென்றனர். அந்த மாணவர்களின் செயலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனும், பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பரமும் பாராட்டினர். மேலும் இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்