பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்
தியாகதுருகத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.;
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் காந்தி நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் பாலாஜி (வயது 22). இவர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயதுடைய மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் வீட்டில் தனியாக இருந்த மாணவியை பாலாஜி பாலியல் பலாத்காரம் செய்தார். இது பற்றி அறிந்ததும் தட்டிக்கேட்ட மாணவியின் தாயை பாலாஜி திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.