பிளஸ்-2 மாணவி பலாத்காரம் நெல் அறுவடை எந்திர டிரைவர் கைது

பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த நெல் அறுவடை எந்திர டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-04 21:06 GMT

தம்மம்பட்டி.

செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கேஸ்வரன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 21). இவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் சக்திவேலுடன் சென்ற மாணவி சென்றதை அறிந்து போலீசார் அவரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவி பெற்றோருடன் செல்ல மறுத்ததால் மாணவியை சேலத்தில் உள்ள காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக சக்திவேல் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து சக்திவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்