பிளஸ்-2 தேர்வு முடிவுகள் - சேலத்தில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

சேலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம்,

Update: 2022-06-20 07:37 GMT

சேலம்,

10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடந்து முடிந்தது. இத்தேர்வில் சேலம் மாவட்டத்தில் இருந்து பிளஸ் 2 பொதுத் தேர்வை 17,500 மாணவர்களும், 19,661 மாணவிகளும் என மொத்தம் 37,161 பேர் தேர்வு எழுதினார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. பிளஸ் 2 தேர்வில் 9.12 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 37,161 பேரில் 34,452 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள்15,674 பேரும் (89.57 சதவீதம்) , மாணவிகள் 18,778 பேரும் (95.51 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.

சேலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி 92.71சதவீதம் ஆகும். இச்சதவீதம் கடந்த 2019-2020 ஆண்டைக் காட்டிலும் (91.52சதவீதம்) அதிகம் ஆகும்.

தற்போது அதைவிட 1.19 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மாணவ மாணவிகளின் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் சுமதி மற்றும் உதயகுமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்