ராமேசுவரத்துக்கு வந்த பிளஸ்-1 மாணவி திடீர் சாவு

குஜராத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு வந்த பிளஸ்-1 மாணவி திடீர் என உயிரிழந்தார். சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2022-11-02 21:29 IST

ராமேசுவரம்

குஜராத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு வந்த பிளஸ்-1 மாணவி திடீர் என உயிரிழந்தார். சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி திடீர் சாவு

குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரா(வயது 49). இவரது மனைவி மனிஷா(37). இவர்களது மகள் சித்தேஸ் நேகல்(16). பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர்கள் கடந்த 26-ந்தேதி ரெயில் மூலமாக திருப்பதி வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து ரெயிலில் புறப்பட்டு 30-ந்தேதி கன்னியாகுமரி வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் புறப்பட்டனர்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு ராமேசுவரத்திற்கு வந்த அவர்கள் கோவில் அருகே உள்ள விடுதி ஒன்றில் தங்குவதற்காக ரெயில்வே நிலையத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறினர். அப்போது அவரது மகள் சித்தேஸ் நேகல் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதை தொடர்ந்து அதே ஆட்டோவில் மகளை ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால், மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காரணம் என்ன?

இதை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மாணவியின் திடீர் சாவுக்கான காரணம் குறித்து ராமேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்