பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செங்கோட்டில் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.;

Update:2023-03-26 00:15 IST

எலச்சிப்பாளையம்

திருச்செங்கோடு ஆண்டிபாளையம் எஸ்.பி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகன் ராம் சுதேஷ் (வயது 16). இவர் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராம் சுதேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது தாயார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் இறந்து விட்டார். இதனால் தாயாரை நினைத்து மன வேதனையில் இருந்த ராம்சுதேஷ், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்