பிளஸ்-1 மாணவர் தற்கொலை
ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் அருகே உள்ள காரேந்தல் காலனி தெருவை சேர்ந்தவர் மலையாண்டி. இவருடைய மனைவி பாண்டி மலர். இவர்களது மகன் சர்வேஷ்வர் (வயது 17). பிளஸ்-1 மாணவர். பெற்றோர் சர்வேஷ்வரனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சர்வேஷ்வர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாண்டிமலர் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.