உடன்குடி பகுதி கோவில்களில் உழவாரப் பணி

உடன்குடி பகுதி கோவில்களில் உழவாரப் பணி நடந்தது.;

Update:2023-08-30 00:15 IST

உடன்குடி:

உடன்குடி அருகிலுள்ள குண்டுமலை சாஸ்தா கோவில், தேரிக்குடியிருப்பு சுடலை மாடசுவாமி கோவில், காயாமொழி நாயகப்பெருமான் கோவில், ராமசுப்பிரமணியபுரம் முத்துமாரியம்மன் கோவில், வட்டன்விளை அம்மன் கோவில், அரசர்பேட்டை அம்மன் கோவில், தைக்காவூர் அம்மன் கோவில், அம்மன்புரம் சூரியகாந்தி அம்மன் கோவிலில் இந்து அன்னையர் முன்னணி சார்பாக உழவாரப் பணி நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் பத்திரசீத்தா. தாமரைச்செல்வி, அன்னபுஷ்பம், செல்வகுமாரி, சூரியகலா, அம்மாள்கனி உட்பட ஏராளமான பொறுப்பாளர்கள் மற்றும் இந்து அன்னையர் முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்