மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

திருவள்ளூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-07-12 10:55 GMT

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

அப்போது கலெக்டர் உறுதி மொழியை வாசிக்க அதனை பின்தொடர்ந்து டாக்டர்கள், நர்சுகள், பயிற்சி கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாசித்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், இந்திரா செவிலியர் கல்லூரி முதல்வர் வச்சலா மற்றும் இந்திரா செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியில் பயிற்சி கல்லூரி மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்ட அதிகாரிகள் உடனடியாக அவரை ஆசுவாசப்படுத்தி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்