கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update:2022-06-15 22:39 IST

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து ெகாண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மாலதி நாராயணசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோபு, குமரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்