பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
சேக்கனூர், தெள்ளூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த சேக்கனூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, ராஜன் பாபு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பெருமாள் வரவேற்றார். இதில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தொடங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே முடிவடைந்தது. இதில் வேலூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, பணி மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் தெள்ளூர் ஊராட்சியில் நடந்த ஊர்வலத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சன்ட் ரமேஷ்பாபு, ராஜன்பாபு, துணை தலைவர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் முகிலன் வரவேற்றார். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.