பகவதி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

பகவதி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.;

Update:2022-05-25 23:58 IST

அன்னவாசல்:

அன்னவாசல் மேட்டுதெருவில் பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் வைகாசி திருவிழாவானது இந்தாண்டு நேற்று இரவு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பூக்களை ஊர்வலமாக் கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களை கொட்டி வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து வைகாசி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் இரவு அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. மேலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கிடாய் வெட்டு பூஜை வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்