நாற்று நடும் பணிகள் தீவிரம்

வத்திராயிருப்பு பகுதிகளில் நாற்று நடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-09-09 19:35 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு பகுதிகளில் நாற்று நடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நாற்று நடும் பணி

வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், கூமாபட்டி, நெடுங்குளம், பிளவக்கல், தாணிப்பாறை, மகாராஜபுரம், மாத்தூர், நெடுங்குளம், கோட்டையூர், இலந்தைகுளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் நாற்று நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது கோடை அறுவடை முடித்த விவசாயிகள் முதல் போக நெல் நடுவிற்காக தங்களது விவசாய நிலங்களை தயார்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் நெல் நாற்றுகளை நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேவையான அளவு தண்ணீர்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் நெல்லை சாகுபடி செய்து வருகிறோம்.

தற்போது வத்திராயிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளான பிளவக்கல், பெரியாறு அணை, கோவிலாறு அணை ஆகியவற்றில் போதுமான அளவு நீர் இருப்பது உள்ளது. அதேபோல கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் தண்ணீர் ஓரளவு இருக்கிறது.

ஆதலால் விவசாயிகள் தற்போது மகிழ்ச்சியுடன் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பாசனத்திற்கான தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு மகசூல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்