பனை விதைகள் நடும் பணி
வேளாங்கண்ணி கடற்கரையில் பனை விதைகள் நடும் பணி நடந்தது.;
வேளாங்கண்ணி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டிதமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் பனை விதைகள் நடும் பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பேபி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் டயானா ஷர்மிளா ஆகியோர் தலைமை தாங்கி பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தனர். இதில் வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது பனை மர விதை நடுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது.