நங்கைமொழி பஞ்சாயத்தில் 1,000 பழ மரக்கன்றுகள் நடும் விழா

நங்கைமொழி பஞ்சாயத்தில் 1,000 பழ மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.;

Update: 2023-08-03 18:45 GMT

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் சாலையோரங்களில் பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ் ஏற்பாட்டில், ரூ.25 லட்சம் மதிப்பில் 1,000-க்கும் மேற்பட்ட பழ மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வேப்பங்காட்டில் நடந்த தொடக்க விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி, ஆணையாளர் ஜான்சிராணி, திட்ட மேலாளர் வளர்மதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து துணைத்தலைவர் பொன்செல்வி வரவேற்று பேசினார்.

விழாவில் பஞ்சாயத்து தலைவர்கள் லங்காபதி, பாலமுருகன், அமுதவள்ளி, சிவசக்தி, ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் சிவமுருகன், ஜெயலட்சுமி அம்மாள்-குருசாமி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பழ மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

விழாவில் நாசரேத் ஜெயராஜ் அன்ன பாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி, வேப்பங்காடு சி.பா.சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி, கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி, நங்கைமொழி ஜெய் இண்டர்நேஷனல் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், வேப்பங்காடு ஊர் தலைவர் செந்தூர் பாண்டியன், தொழில் அதிபர் உதயகுமார், தபால் துறை அதிகாரி பீட்டர், ஊர் பிரமுகர்கள் பொன்ராஜ், கார்த்திகேயன், சேர்மத்துரை, நங்கைமொழி மாடசாமி, செந்தூர்பாண்டி, சுரேந்தர், ஆறுமுகபாண்டி, விஜயா, கலைச்செல்வன், தங்கவேல் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பஞ்சாயத்து செயலாளர் வயலா சாந்தகுமாரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்