500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
திண்டுக்கல் பகுதியில் குறுங்காடுகள் திட்டத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.
திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஊராட்சி அரசனம்பட்டியில் ஆவிளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் தோட்டனூத்து ஊராட்சி நிர்வாகம், மாவட்ட வனத்துறை ஆகியவை சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு ஊராட்சி தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அதையடுத்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் புங்கை, மகாகனி, வேம்பு, குமில், நாவல் உள்ளிட்ட பல்வேறு வகைகளை சேர்ந்த 500 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. மேலும் இந்த மரக்கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வனஅலுவலர் பிரபு, தொழில்அதிபர் ரெத்தினம் உள்பட பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.