5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

நாகை மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ெதாடங்கி வைத்தார்.

Update: 2023-06-09 18:45 GMT

நாகை மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ெதாடங்கி வைத்தார்.

மரக்கன்றுகள் நடும் திட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை மூலம் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

அதன்படி நாகை- கடலூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து மரம் நடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் நாகராஜன் உள்பட உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்