வருகிற 31-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்டத்தில், தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டம்

வருகிற 31-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் கூறினார்.;

Update:2022-05-24 20:35 IST

திருவாரூர்:-

வருகிற 31-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் கூறினார்.

தூர்வாரும் பணிகள்

திருவாரூர் மாவட்டத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை செயலாளரும், கண்காணிப்பு அலுவலருமான கிர்லோஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:-

கண்காணிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அதன்படி 115 பணிகள் 1200.56 கி.மீ. நீளத்துக்கு ரூ.12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் நடக்கின்றன. இதுவரை 79.10 சதவீதம் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தூர்வாரும் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகிற 31-ந் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, செயற்பொறியாளர் முருகவேல் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்