புறா பந்தயம்

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் புறா பந்தயம் நடைபெற்றது.;

Update:2022-07-16 00:53 IST

கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நேற்று 52-வது ஆண்டாக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வைரப்பெருமாள் நினைவு முன்னிட்டு சாதா புறா பந்தயம் நடைபெற்றது. இந்த சாதா புறா போட்டி தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் சாதா புறாவிற்கு கண்கள் மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாக இருக்க வேண்டும். சாதா புறா நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரம் வானில் பறக்க வேண்டும். புறா உட்காரும் இடத்தில் நான்கு இறக்கை வெட்டு புறா இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட புறாக்கள் கலந்து கொண்டன. வெற்றி பெறும் புறாக்களுக்கு முதல் பரிசாக ரூ.13 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.7 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.4 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி கர்ண புறா போட்டி தொடங்க உள்ளது. வெற்றிபெறும் புறாக்களுக்கு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி பரிசு வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்