ரயில் நிலையத்தில் துண்டு, துண்டாக ஒயர்கள், கம்பிகள்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் வெளியான தகவல்
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளங்களுக்கு இடையே அதிக அளவு கம்பிகள் ஒயர்கள் துண்டு துண்டாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
சுதந்திர தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை ரயில் நிலையத்தில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அப்போது தண்டவாளங்களுக்கு இடையே கம்பிகள் ஒயர்கள் துண்டு, துண்டாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, ரயில்பாதை மின் மயமாக்கல் பணியின்போது பயன்படுத்தப்பட்ட கம்பி ஒயர்கள் தண்டவாளங்களில் விழுந்திருக்க கூடும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆபத்தை உணராமல் தண்டவாளங்களில் கம்பிகளை போடக்கூடாது என ரயில்வே ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.