தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 284 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-30 17:14 GMT

அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 284 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நஞ்சப்பன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில குழு உறுப்பினர்கள் தேவராசன், தமிழ்குமரன், சின்னசாமி, மாதேஸ்வரன், கமலாமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தலைமை தபால் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, தயிர் உள்ளிட்டவற்றின் மீது மத்திய அரசு விதித்துள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

284 பேர் கைது

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகரித்து வரும் வரி சுமையால் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தை ஒட்டி அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 53 பெண்கள் உள்பட 284 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்