கிணற்றில் மூழ்கி பிசியோதெரபி டாக்டர் பலி

கடையநல்லூர் அருகே கிணற்றில் மூழ்கி பிசியோதெரபி டாக்டர் பலியானார்.

Update: 2023-05-24 20:20 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துகுமார் (வயது 38). பிசியோதெரபி டாக்டரான இவர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். நேற்று மாலையில் சொக்கம்பட்டி அருகே சிங்கிலிபட்டியில் உள்ள தோட்டத்தில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் நிலைதடுமாறி தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீசார் மற்றும் கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முத்துகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்