கும்பகோணம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு

கும்பகோணம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-01-08 00:30 IST

கும்பகோணம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெட்ரோல் குண்டு வீச்சு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உமா மகேஸ்வரபுரம் சாலை பகுதி வழியாக வீரசோழன் ஆறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையோர மதில் சுவர் அருகே சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கொரநாட்டு கருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் திருவிடைமருதூர் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் அங்கு பெட்ரோல் குண்டு வீசியது யார்? எதற்காக வீசினார்கள்? பெட்ரோல் குண்டு வீசியதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக தஞ்சையில் உள்ள தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு இருந்து தடயவியல் நிபுணர்கள் உமாமகேஸ்வரபுரம் சாலை பகுதிக்கு வந்து குண்டு வீசப்பட்ட இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்