ஆதிதிராவிட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க கோரிக்கை - திருவள்ளூர் வருவாய் கோட்ட அலுவலரிடம் மனு

திருவள்ளூர் மாவட்டம் பிராயம்பத்து கிராமத்தில் ஆதிதிராவிட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க கோரிக்கை மனுவை திருவள்ளூர் வருவாய் கோட்ட அலுவலரிடம் அளித்தனர்.;

Update:2023-07-16 16:53 IST

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் பிராயம்பத்து கிராமத்தில் அமைந்துள்ள தேவி இளங்காளியம்மன் கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக திருவள்ளூர் வருவாய் கோட்ட அலுவலரிடம் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பிராயம்பத்து கிராமத்தில் தேவி இளங்காளியம்மன், கற்பக விநாயகர், தேவி எல்லையம்மன் ஆகிய ஆலயங்கள் அமைந்துள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள இந்த கோவில்களில் ஆதிதிராவிட மக்களாகிய எங்களை உள்ளே சென்று வழிபாடு செய்ய அனுமதிக்கவில்லை.

மேலும் கிராமத்தில் பிரச்சினையை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு அணியினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். எனவே எங்கள் கிராமத்தில் அமைந்துள்ள மேற்கண்ட கோவில்களின் நிர்வாகத்தில் எங்களையும் சேர்த்துக் கொண்டு திருவிழாக்கள், தீமிதி திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்திட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்ட அலுவலர் ஜெயராஜ பவுலின் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததார்.

Tags:    

மேலும் செய்திகள்