உசிலம்பட்டி அருகே கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 13 கிராம மக்கள் மனு
உசிலம்பட்டி அருகே கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 13 கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.;
உசிலம்பட்டி
நில ஆக்கிரமிப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓட்டைக்கோவில் எனப்படும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த கோவிலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றித்தர கோரி தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட 13 கிராம மக்கள் ஒன்று திரண்டனர்.
கோட்டாட்சியரிடம் மனு
அந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா தலைமையில் உசிலம்பட்டி முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். உசிலம்பட்டி கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் தாசில்தார் சுரேஷ் விரைவில் இந்த கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.