வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு
வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு அளித்தனர்
மானாமதுரை
மானாமதுரை அருகே உள்ள விளாக்குளம், செய்யாலூர், முத்துராமலிங்கபுரம், பீக்குளம், மேலப்பிடாவூர், பில்லத்தி, சேத்தனேந்தல், கள்ளிசேரி, மேலப்பெருங்கரை, கீழப்பெருங்கரை, மாயாளி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வரத்து உள்ள பாதையில் தாயமங்கலம் ரோட்டில் உள்ள இடத்தை தமிழக அரசு ஒரு பிரிவினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க அளவீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கினால் மேற்கண்ட 15 கிராம கண்மாய்களுக்கும் நீர்வரத்து இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படும் என கிராம மக்கள் மானாமதுரை தாலுகா அலுவலகத்திற்கு வந்து தாசில்தாரிடம் வீட்டுமனை பட்டா வழங்கக் கூடாது என கோரிக்கை மனுவை வழங்கினர். பின்னர் இதுகுறித்து தாசில்தார் ராஜா விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.