ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்

திருப்பூரில் நிர்வாண புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி கர்ப்பமாக்கிய ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்து முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-05-15 14:53 GMT

திருப்பூரில் நிர்வாண புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி கர்ப்பமாக்கிய ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்து முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாண புகைப்படம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் முடிந்தது. எனக்கு 2 வயதில் மகள் உள்ளாள். எனக்கும், எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் எனது உறவினரான தேனியை சேர்ந்த 25 வயது இளைஞருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் என்னை திருமணம் செய்து கொண்டு எனது மகளை பார்த்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டார்.

அதை செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டார். பின்னர் என்னை திருமணம் செய்யுமாறு நான் கூறியதற்கு அவர் மறுத்து வந்தார். இந்தநிலையில் செல்போனில் எடுத்த புகைப்படத்தை காட்டி இணையதளத்தில் வெளியிடுவதாக என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டு வந்தார். இதனால் நான் கர்ப்பமானேன். அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் எனக்கு தெரியாமல் பழச்சாறில் கருக்கலைப்பு மாத்திரையை எனக்கு கொடுத்ததால் கருக்கலைப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார்.

ராணுவ வீரர்

இந்தநிலையில் இளைஞரின் பெற்றோர், தனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளது. இத்துடன் பேசுவதை நிறுத்திவிடு. இல்லாவிட்டால் நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவோம் என்று என்னை மிரட்டினார்கள். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தெற்கு மகளிர் போலீசார், அந்த இளைஞரின் பெற்றோரை மட்டும் வரவழைத்து பேசி, பின்னர் கோர்ட்டு மூலம் என்னை தீர்வு காணுமாறு அனுப்பிவைத்து விட்டனர்.

என்னை நிர்வாண படம் எடுத்து மிரட்டி என்னை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்த ராணுவ வீரர், என்னை மிரட்டிய அவரின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அந்த பெண் கூறியுள்ளார்.

இந்திய ராணுவ வீரர் மீது புகார் மனு கொடுத்த சம்பவத்தால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்