புதிய ஆழ்குழாய் அமைக்க வேண்டும்

புதிய ஆழ்குழாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-04-04 18:45 GMT

தொண்டி 

தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், தொண்டி தி.மு.க. நகர செயலாளர் இஸ்மத் நானா, நகர் காங்கிரஸ் தலைவர் காத்தராஜா ஆகியோர் கருமாணிக்கம் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தொண்டி பேரூராட்சி பகுதியில் சோலார் விளக்குகள் அதிக அளவில் அமைக்க வேண்டும். கடற்கரை சாலையில் அமைந்துள்ள மீன்வளத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த ஐஸ் பிளாண்ட் செயல்படாமல் உள்ளது. இதனை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கடற்கரை ரோட்டில் அமைந்துள்ள ஜெட்டி பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அதனை மராமத்து செய்ய வேண்டும். தொண்டியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். புதிதாக அங்கன்வாடி மையம் கட்டித் தர வேண்டும். பேரூராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்த சேந்தனி கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் பழுதடைந்து விட்டது. எனவே புதிதாக ஆழ்குழாய் அமைத்து புதிதாக மின்மோட்டார் பொறுத்தி தொண்டி பேரூராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்திட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்