திருவெண்ணெய்நல்லூர்வைகுண்ட வாசகப் பெருமாள் கோவில் தேரோட்டம்
திருவெண்ணெய்நல்லூர் வைகுண்ட வாசகப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் ஜனக வள்ளி தாயார் சமேத வைகுண்ட வாசகப் பெருமாள் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விழா கடந்த 26-ந்தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கி, தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
தேரோட்டத்தையொட்டி, ஜனக வள்ளி தாயார், சமேத வைகுண்ட வாசகப் பெருமாளுக்கு பூஜைகள் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.