மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-14 18:30 GMT

2023-2024-ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களது விண்ணப்பங்களை இ-சேவை இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தும் திட்டங்களான கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கி கடன் மானியம், திருமண உதவி தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்குதல் ஆகிய திட்டங்களின் கீழ் எளிதாக மாற்றுத்திறனாளிகள் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலமாக மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்