பெரியமாவிலன் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி

ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பெரியமாவிலன் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கியது

Update: 2023-05-04 18:45 GMT

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருமணஞ்சேரி ஊராட்சியில் இருந்து மாப்படுகை ஊராட்சி வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பெரியமாவிலன் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வில் குத்தாலம் முன்னாள் எம்.எல்.ஏ.வும்,தி.மு.க. மாநில கொள்கை பரப்புத்துணை செயலாளருமான குத்தாலம் க.அன்பழகன் கலந்து கொண்டு தூர்வாரும் பணியை பார்வையிட்டு விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார். அப்போது குத்தாலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வைத்தியநாதன், ஒன்றிய துணை செயலாளர் செந்தில், வாணாதிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி தமிழரசன்,குத்தாலம் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த வடிவால் வாய்க்கால் தூர்வாரும் பணியினால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்