கீரமங்கலம் பகுதியில் மிளகு சாகுபடி; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பார்வையிட்டார்

கீரமங்கலம் பகுதியில் மிளகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பார்வையிட்டார்.;

Update:2022-12-19 00:56 IST

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், சேந்தன்குடி, பட்டிபுஞ்சை உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் மிளகு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குளிர் அதிகமுள்ள பகுதிகளில் மட்டுமே மிளகு சாகுபடி செய்யப்படும் நிலையில் சமவெளியிலும் மிளகு சாகுபடி செய்வது சாத்தியமே என்பதை புதுக்கோட்டை விவசாயிகள் நிரூபித்துள்ளனர். அதே போல் விலை உயர்ந்த மரங்கள், டிராகன்புரூட் உள்ளிட்ட பழ மரங்களையும் வளர்த்து வருகின்றனர். இதனை அறிந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதிபதி பாரதிதாசன் ஆகியோர் சேந்தன்குடி கிராமத்திற்கு சென்றனர். பின்னர் விவசாயிகள் தங்க கண்ணன், செந்தமிழ்செல்வன் ஆகியோரது தோட்டங்களை அவர்கள் பார்வையிட்டனர். அதன்பின்னர் தென்னை, பலா உள்ளிட்ட மரங்களில் மிளகு கொடிகளை படரவிட்டு மிளகு சாகுபடி செய்வது மற்றும் மிளகு நாற்று உற்பத்தி ஆகியவற்றை பார்வையிட்டு விவசாயிகளை பாராட்டி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்