செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-22 10:43 GMT

இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 248 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வீதம் ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டிலான மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியையும், மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயம் மற்றும் மரணம் அடைந்த 17 நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதியையும், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் பணியை சிறப்பாக மேற்கொண்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (பொறுப்பு) ) லட்சுமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லலிதா, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் சுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்