செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

Update: 2023-02-07 10:16 GMT

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 232 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டார்.

இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி உடல் நலக் குறைவால் 29.5.2021 மற்றும் 5.6.2021 ஆகிய நாட்களில் பணியிடைக் காலமான பிரபாகரன் மற்றும் அய்யப்பன் ஆகியோரின் வாரிசுதாா்கள் வினோதினி மற்றும் ஹரிணி ஆகியோருக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணி நியமனம் செய்து பணிக்கான ஆணையை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.

அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) இப்ராஹிம், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வெற்றி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்