மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றம்
மக்கள் குறைதீர்வு கூட்டம் ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
மக்கள் குறைதீர்வு கூட்டம் ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் புதிதாக திறக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் ராணிப்பேட்டை, பாரதி நகர், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கிற்கு வந்து மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.