சேலம் மாவட்டத்தில் நடந்தமக்கள் நீதிமன்றம் மூலம் 210 வழக்குகளுக்கு தீர்வுவிபத்தில் இறந்த தொழிலாளியின் மனைவிக்கு ரூ.13¼ லட்சம் இழப்பீடு

சேலம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 210 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், விபத்தில் இறந்த தொழிலாளியின் மனைவிக்கு ரூ.13¼ லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

Update: 2023-10-14 20:38 GMT

சேலம்

சேலம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 210 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், விபத்தில் இறந்த தொழிலாளியின் மனைவிக்கு ரூ.13¼ லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டிலும், சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோர்ட்டுகளிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில், விபத்து, சிவில், காசோலை, குடும்ப நலம், உரிமையியல் உள்பட 421 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது.

சேலம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தொடங்கி வைத்தார். சார்பு நீதிபதி தங்கராஜ் முன்னிலை வகித்தார். சேலம் உள்பட மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 8 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்குகளில் தொடர்புடைய இருதரப்பினரும் கலந்து கொண்டு தங்களது வழக்குகளை முடித்துக்கொண்டனர்.

அதாவது, 421 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதில் 210 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.9 கோடியே 52 லட்சத்து 77 ஆயிரத்து 260-க்கு பைசல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.13.¼ லட்சம் இழப்பீடு

சேலத்தில் தனியார் ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த விஜயராகவன் (வயது 41) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி இரவு பிரபாத் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவருடைய மனைவி சோமசுந்தரி, விபத்து இழப்பீடு தொகை கேட்டு சேலம் மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நேற்று சமரசத்திற்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட சோமசுந்தரிக்கு ரூ.13 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடு தொகைக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

People's CourtPeople's Court

இதேபோல், சேலம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த தனபால்-சோனியாகாந்தி தம்பதி தொடரப்பட்ட விவகாரத்து வழக்கு நேற்று மாவட்ட நீதிபதி தீபா தலைமையில் சமரசத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, கணவன்-மனைவி இடையே நடந்த சமரச பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டு 3 ஆண்டுகளாக பிரிந்திருந்த தம்பதியினர் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒன்று சேர்ந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் நீதிபதிக்கு நன்றி தெரிவித்து ஜோடியாக வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்