தவறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார்.

Update: 2023-11-20 08:22 GMT

சென்னை,

விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்தி. இதுபோன்ற வதந்திகளை நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்