தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை

தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-05-03 19:30 GMT

திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான்சாவடியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாகை கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

மரைக்கான்சாவடியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் பற்றாக்குறை நிலவிவருகிறது. பல கட்டமாக எங்கள் பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதன் பலனாக சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறக்கப்பட்டு 3 மாத காலத்தை கடந்து விட்டது. ஆனால் இதுவரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. கடந்த காலங்களை போல் இந்த ஆண்டும் மரைக்கான்சாவடி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்