காயல்பட்டினம்கடற்கரையில் காணும் பொங்கல் கொண்டாடிய மக்கள்
காயல்பட்டினம்கடற்கரையில் பொதுமக்கள் குவிந்து காணும் பொங்கல் கொண்டாடினர்.;
ஆறுமுகநேரி:
காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரையில் ஆறுமுகநேரி, ஆத்தூர், திருச்செந்தூர் நாசரேத், குரும்பூர், ஏரல் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கடற்கரையில் குவிந்தனர். அங்கு பல கடைகளும், விளையாட்டு பொழுதுபோக்கு சாதனங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. மாலை 6.30 மணியில் இருந்து
மக்கள் சாரை சாரையாக வரத்தொடங்கினர். இதனால் பஜாரில் இருந்து கடற்கரை வரை கூட்ட நெரிசல் ஏற்பட்டு, சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நள்ளிரவு வரை மக்கள் காணும் பொங்கலை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.