ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;

Update:2023-05-17 00:39 IST

உப்பிலிபுரம் ஒன்றியம் ஒக்கரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் துறை திட்டத்தின் கீழ் பணிபுரியும் 100 நாள் திட்ட பணியாளர்கள் நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது, பணியில்லை என ஊராட்சி நிர்வாகத்தினர் கூறிஉள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பணியாளர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வருட விசேஷ நாட்களில் செய்த வேலைக்கான சம்பளமும் பட்டுவாடா செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்