திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க மக்கள் ஆர்வம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

Update: 2022-08-27 16:39 GMT

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை எந்தவித குறைபாடும் இல்லாமல் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் ஒருசிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது. இதனால் வாக்காளர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே வாக்காளர்களின் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை பெறும் பணி நடக்கிறது. இந்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடத்தி பணியை துரிதப்படுத்தும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 115 வாக்குச்சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியலில் இணைக்க தங்களுடைய ஆதார் அட்டை நகலை வழங்கினர். இதைத் தொடர்ந்து வருகிற 4-ந்தேதியும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அந்த முகாமிலும் ஆதார் எண்ணை வழங்கலாம். அதோடு www.NVSP.in எனும் இணையதளம், ஓட்டர் ஹெல்ப்லைன் எனும் செயலி மூலமாகவும் ஆதார் எண்ணை சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்