நெல்லையில் சந்திர கிரகணம் தெரியாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
மழையின் காரணமாக நெல்லையில் சந்திர கிரகணம் தெரியவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மழையின் காரணமாக நெல்லையில் சந்திர கிரகணம் தெரியவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சந்திர கிரகணம்
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை சந்திர கிரகணம் என அழைக்கிறோம். இந்த அரிய நிகழ்வு நேற்று நடந்தது. பல்வேறு நாடுகளில் முழு சந்திர கிரகணம் தெரிந்தாலும் இந்தியாவில் பகுதி சந்திர கிரகணம் மட்டுமே தெரிந்தது. இந்த நிகழ்வு மாலை 5.40 மணிக்கு தொடங்கி 6.19 வரை நடந்தது.
நெல்லையில் சந்திர கிரகணத்தை பார்க்க மாவட்ட அறிவியல் மையத்தில் அதிநவீன தொலைநோக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் இந்த நிகழ்வை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
உலக்கைகள்
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் மாவட்ட அறிவியல் மையத்தில் திரண்டனர். ஆனால் மழையின் காரணமாக சந்திர கிரகணத்தை பார்க்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நெல்லை டவுன் சந்தி விநாயகர் முக்கில் 2 உலக்கைகள் 2 மணி நேரம் செங்குத்தாக நிற்க வைக்கப்பட்டு இருந்தது. அதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.