தாராபுரத்தில் மண்டல கருத்தரங்கம்

தாராபுரத்தில் மண்டல கருத்தரங்கம்

Update: 2022-08-28 12:14 GMT

தாராபுரம்

தாராபுரத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம்(பங்களிப்பு ஓய்வூய திட்ட ஒழிப்பு இயக்கும்) திருப்பூர் நீலகிரி, கரூர், சேலம் ஈரோடு ஆகிய மாவட்ட மையங்கள் சார்பில் திருப்பூர் மண்டல அளவிலான கருத்தரங்கம் தமிழ் கலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நவீன் தலைமை தாங்கினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தலைவர்கள், ஞானசேகரன், ரமேஷ்வரன், செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அப்போது தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி 2003-ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பணி நிறைவுக்கு பின் மாதாந்திர ஓய்வூதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. ஆனாலும் அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை. இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் தி.மு.க.அரசு ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஆதலால் வருகின்ற செப்டம்பர் 9-ந் தேதி 14 இடங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்