ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-05-26 20:12 IST

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டையில் மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மாவட்ட தலைவர் கோமதிநாயகம் தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத்தலைவ௳ர் முத்துகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்ைத தொடங்கி வைத்து பேசினார். வெங்கடாசலம், ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் நெல்லை மாவட்ட செயலாளர் முத்துசாமி, கோட்ட செயலாளர் முத்தையா, பொன்ராஜ், குமாரசாமி, ஆறுமுகம், நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்