5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-20 19:03 GMT

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் கேசவன், பொருளாளர் ஜான் ஜோசப்சிரில் உள்ளிட்ட நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும்.

மேலும் மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தாவை குறைக்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்